நெடுந்தீவிற்கான படகுகள் சீரின்மையால் பயணிகள் அவதி

Jaffna S Shritharan Sri Lanka Navy
By Theepan Dec 15, 2025 05:57 AM GMT
Report

யாழ்ப்பாணம் - நெடுந்தீவிற்கு செல்வதற்கான படகுகள் சீரின்மையால் நெடுந்தீவிற்கு போக்குவரத்து செய்யவிருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று (15) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பயணிகள் பல மணி நேரமாக படகிற்காக காத்திருக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக நெடுந்தீவிற்கு செல்ல முற்பட்டவேளை போக்குவரத்திற்கான படகுகள் சீரின்மையால் பயணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

உலுக்கிய சம்பவம் - ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் - ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் இன்று நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதற்கு செல்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் ஒரு தொகுதியினர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் தயாராகியிருந்தனர்.

நெடுந்தீவிற்கான படகுகள் சீரின்மையால் பயணிகள் அவதி | Due To The Lack Of Repair Of The Boats To Delft

இதன்போது அனைவரையும் ஏற்றிச் செல்வதற்காக கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தாரகை படகு வருகைதந்தது. படகில் ஏறுவதற்காக நீண்ட வரிசைகளில் அரச உத்தியோகத்தர்கள், வங்கி முகாமையாளர்கள், வைத்தியர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் நிவாரணபணிகளை முன்னெடுப்பவர்கள் என பலரும் காத்திருந்தனர். ஆனால் கடற்படையினர் 100 பேரை மாத்திரமே படகில் ஏற்ற முடியும் என கூறினர்.

அத்துடன் நெடுந்தீவுக்கான குமுதினிப் படகும் பழுதடைந்துள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் குறிப்பிட்டார். இதனால் தினசரி வேலைக்குச் செல்லும் பல அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் படகில் செல்லமுடியாது புறக்கணிக்கப்பட்டனர்.

அசோக ரன்வல மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா...! காவல்துறை வெளியிட்ட தகவல்

அசோக ரன்வல மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா...! காவல்துறை வெளியிட்ட தகவல்

படகிற்காக காத்திருக்கின்றனர்

மக்கள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும் தனது பயணத்தை இரத்து செய்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட நிலையில் எவ்வித ஆக்கபூர்வமான பதிலும் கிடைக்கவில்லை.

நெடுந்தீவிற்கான படகுகள் சீரின்மையால் பயணிகள் அவதி | Due To The Lack Of Repair Of The Boats To Delft

இறுதியில் நெடுந்தீவு பிரதேச செயலரின் முயற்சியில் இறந்தவரின் உடலைக்கொண்டு செல்லும் தனியார் படகு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்களைக் கொண்டு செல்ல முயற்சித்தனர்.

இந்தநிலையில் இறந்த உடலுடன் செல்வதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் குறித்த பயணமும் இரத்தானது. இறுதியில் நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் படகிற்காக அனைவரும் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதி

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதி

நெடுந்தீவிற்கான படகுகள் சீரின்மையால் பயணிகள் அவதி | Due To The Lack Of Repair Of The Boats To Delft

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி