துமிந்த விடுதலை- உள்ளூர் மற்றும் சர்வதேசத்தின் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ள கோட்டாபய! கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பு

duminda silva release gotabhaya sri Lanka
By Kalaimathy Jun 26, 2021 05:16 AM GMT
Report

அனைத்து கைதிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கையை மீறுவதும், அரசுக்கு சார்பான கைதிகளுக்கு விசேட சலுகைகளை வழங்குவதும் ஏனைய கைதிகளின் அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் மீறுவதாக அமையுமென கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

அரசியல் தொடர்பு மற்றும் பண பலத்தின் அடிப்படையில் துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டுள்ளதை எதிர்ப்பதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. "ஒரு கைதியை விடுவிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் ஒரு நபரின் சிவில் அந்தஸ்து, பணபலம், அதிகாரம் அல்லது அரசியல் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் அதை எதிர்க்கிறோம்" என அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

"துமிந்த சில்வா விடுதலை மற்றும் நியாயத்தின் மந்தநிலை" என்ற தலைப்பில் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளி என்பதோடு, மரண தண்டனை விதிக்கப்பட்ட, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேற்பார்வை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வா பொசன் தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளூர் மற்றும் சர்வதேசத்தின் எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளார்.

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் இலங்கை ஜனாதிபதிகள் மன்னிப்பு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர் பல எடுத்துக்காட்டுகளை முன்மொழிந்துள்ளார். "மரண தண்டனை விதிக்கப்பட்ட, மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி, சமன் தேவாலாயத்தின் பஸ்நாயக்க நிலமே அன்டன் தென்னகோன், ரோயல் பார்க் வழக்கின் ஜூட் ஜெயமஹ மற்றும் மிருசுவில் படுகொலையின் சுனில் ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதியின் மன்னிப்பின் காரணமாக நியாயமற்ற முறையில் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்” என சட்டத்தரணி சேனக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரம் அரசியலமைப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்  அல்லது சில சுயாதீன அதிகார அமைப்பின் ஊடாக மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என கடந்த காலத்தில் ஒரு சமூக விவாதம் ஆரம்பமானதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி,  ஜனாதிபதியின் இந்த அநியாய சர்வாதிகாரம் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

துமிந்தா சில்வா வழக்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள பின்னணியில், அனைத்தையும் புறந்தள்ளுவதன் ஊடாக, நீதிமன்ற உத்தரவுகள் பயனற்றவை என பொது மக்கள் அவநம்பிக்கை கொள்ள அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். "சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதில் நீதித்துறை செயலற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தானது" என வலியுறுத்தியுள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அரசியல் பழிவாங்கல் என விளக்கமளித்து யாராவது பொதுமக்களை தவறாக வழிநடத்த முயன்றால், அது ஒரு ஜனநாயக நடைமுறை அல்ல என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.

"இலங்கையின் வரலாற்றை அவதானிக்கையில், அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள் அரசியல் பழிவாங்ல் என்ற சொல்லின் ஊடாக தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்விக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.”

எனவே, 'துமிந்த ஒரு மனிதர்' என்ற கொள்கைக்கு பதிலாக, கைதிகள் மனிதர்கள் என்ற கொள்கைக்கு அமைய, 25,000ற்கும் மேற்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டமைப்பில், நிவாரணம் வழங்குவதன் அவசியத்தை, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.

கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட துமிந்த சில்வாவின் விடுதலையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா ஆகியன கண்டித்துள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020