துமிந்த சில்வாவை விடுவித்தது ஏன்? வெளிவந்த காரணம்
துமிந்த சில்வாவின் விடுதலை எங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமையவே இடம்பெற்றது என சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,
அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் எந்தவித அரசியலும் இல்லை. நாட்டில் உள்ள அரசியல் அமைப்பின் பிரகாரமே விடுதலை இடம்பெற்றுள்ளது.
எமது பணி என்னவென்றால் எங்களுக்கு தரப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதே. எங்களிடம் கைதிகளை விடுவிக்கவோ அல்லது சிறைப்படுத்தவோ எந்தவித அதிகாரமும் இல்லை.
விடுவிக்கச் சொன்னால் விடுவிப்போம் அல்லது சிறையில் அடைக்கச் சொன்னால் சிறை வைப்போம். அதுவே எமது பணி என்றார்.