இ8 விசா விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இ8 விசா முறைமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
டொலர் உற்பத்தி
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "டொலர் உற்பத்தியின் முக்கிய பகுதிகளில் ஒன்று வெளிநாட்டு பணம் அனுப்புதல் ஆகும்.
தற்போது கொரியாவில் (Korea) பணிபுரியும் 28,000 முதல் 30,000 வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு வழங்கும் பணம் மிகவும் முக்கியமானது.
அதற்காக, அரசாங்கம் வெளிநாட்டு சேவை பணியகத்தின் தலையீட்டுடன் ஒரு குறிப்பிட்ட சட்ட அமைப்பை அறிமுகப்படுத்தி வந்தது.
அதுதான் இ9 (E9) விசா முறை. ஆனால் இந்த இ8 விசா முறையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (Sri lanka bureau of foreign employment) கூட தெரியாத, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் ஒப்பந்தங்களுக்கு உட்படாத ஒரு சட்டவிரோத செயலாகும்.
அப்படியென்றால், சட்டத்திற்குப் புறம்பான செயலை அரசால் சட்டப்பூர்வமாக்க முடியாது'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |