மண்மேடுடன் சரிந்து வீழ்ந்த கற்பாறைகள்! ஆறு வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை
weather
corona
wattavala
By Shalini
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் ஆறு குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுயதனிமை பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள வெளிஓயா கீழ் பிரிவில் இன்று (25) அதிகாலை மண்மேடுடன் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் கடுமையாக சேதமாகியுள்ளன.
அதே வேளை, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லொயினோன் தோட்டப் பகுதியில் இன்று ( 25 ) மதியம் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.
மண்சரிவினால் உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் உடமைகள் சேதமாகி
உள்ளதுடன் சேத விபரம் தொடர்பில் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள்
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி