உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்தல் மற்றும் உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தொடர்புடைய வழக்கு நவரத்ன மாரசிங்க, பிரதீப் அபேரத்ன மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சாட்சி விசாரணை
இந்த வழக்கில் ஒரு பிரதிவாதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், சாட்சி விசாரணையை வேறு திகதிக்கு அழைக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கின் சாட்சி விசாரணை செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கின் அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
