சனல்-4 ஆவணப்பதிவு விவகாரம்: ரணில் அரசாங்கம் எடுத்த தீர்மானம்
பிரித்தானியா ஊடகமான சனல்-4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிட்டுள்ள ஆவணப்பதிவு குறித்து கருத்து வெளியிடாதிருக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியா ஊடகமான சனல்-4 வெளியிட்ட ஆவணப்பதிவு குறித்த விசாரணைகள் தற்போது வெவ்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் எடுத்த தீர்மானம்
இதனடிப்படையில், விசாரணை அறிக்கைகள் கிடைக்கப் பெறும் வரை அமைதி காக்க சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட ஆவணப்பதிவின் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப்பட்டால், அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தேவையேற்படின் மாத்திரம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இது குறித்த விளக்கமளிக்கப்படுமெனவும் மேலும் கூறப்பட்டுள்ளது.
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 3 மணி நேரம் முன்