ஈஸ்டர் தாக்குதல் அரசியல் கரும்புள்ளிக்குள் மறைந்து கிடக்கும் இரகசியங்கள்

Pillayan Sri Lanka Easter Attack Sri Lanka Suresh Salley
By Dharu Feb 27, 2026 10:03 AM GMT
Report

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான சம்பவமாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணி பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் திட்டமிட்ட அரசியல் சதியாகவும், குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர முயன்ற நடவடிக்கையாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

கோட்டாபயவுடன் தொடர்புடைய சில இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வட்டார நபர்கள் இந்தச் சூழலை உருவாக்கச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது இந்த விசாரணையில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்தித்தார்..! சரத்வீரசேகர கேள்வி

இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்தித்தார்..! சரத்வீரசேகர கேள்வி

சஹ்ரான் மற்றும் குழு

சஹ்ரான் மற்றும் தாக்குதல் குழுவிற்கு நிதி, ஆயுத ஆதரவு வழங்கப்பட்டதாகவும், இன - மத மோதல்களைத் தூண்டி அரசியல் பலன் பெற முயற்சி செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் அரசியல் கரும்புள்ளிக்குள் மறைந்து கிடக்கும் இரகசியங்கள் | Easter Attacks 12 Secret

மேலும், மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஏமாற்றப்பட்டார்களா அல்லது தொடர்புடையவர்களா என்ற கேள்விகளும் எழுகின்றன. தாக்குதல் தொடப்பில் சம்பவத்துடன் தொடர்புடைய பல அம்சங்கள் குறித்து ஆழமான, சுயாதீன விசாரணை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

அதன்படி, ஈஸ்டர் ஞாயிறு சதியின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் அம்பலப்படுத்த வேண்டும்.

குறிப்பாக சிறிசேனவின் நம்பிக்கைக்குரியவராக அடிகேடிடப்படும் நிலந்த ஜெயவர்தனவைப் பயன்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு கொடிய குற்றவாளி கூட்டாளியாக சிக்க வைத்ததாக சில சிங்கள நாளிதழ்கள் விளக்குகின்றன.

சுரேஷ் சாலே கைது! பிள்ளையான் கொடுத்த வாக்குமூலத்தால் நாமலுக்கு இறுகும் பிடி

சுரேஷ் சாலே கைது! பிள்ளையான் கொடுத்த வாக்குமூலத்தால் நாமலுக்கு இறுகும் பிடி

சிறிசேனவுக்கு ஒரு வாக்குறுதி

நிலந்த மூலம், அவர்கள் சிறிசேனவுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தனர் என்றும் அதாவது, கோட்டாபய ராஜபக்சவின் கீழ் அமைக்கப்படும் அரசாங்கத்தின் நிரந்தர பிரதமராக சிறிசேன நியமிக்கப்படுவார் என்றும் கருத்துக்கள் உள்ளதாக குறித்த ஊடகம் விளக்கியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் அரசியல் கரும்புள்ளிக்குள் மறைந்து கிடக்கும் இரகசியங்கள் | Easter Attacks 12 Secret

இந்த விடயம் பல கேள்விகளை எழுப்புகிறது. ஆக ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு தந்திரமாக இந்தியாவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் ஏன் சிறிசேன சென்றார்?

சரத் பொன்சேகா கூறுவது போல இரகசியமாக ஏன் நாட்டுக்கு வருகைத்தந்தார்?

அப்படியானால் கீழுள்ள விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியம் என குறித்த ஊடகம் விளக்கியுள்ளமையும் ஆராயப்படவேண்டும்...

சுரேஸ் சாலே குதிரையில் புலிக்காய்ச்சல் சவாரி! சதிகளை மறைக்கும் சுதி அரசியல்!

சுரேஸ் சாலே குதிரையில் புலிக்காய்ச்சல் சவாரி! சதிகளை மறைக்கும் சுதி அரசியல்!

கேள்விகள்

1. தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து தனக்குத் தெரிந்தவற்றை வெளிப்படுத்துவேன் என்று கோட்டாபயவை மைத்திரிபால சிறிசேன மிரட்டியதாக வெளிவந்த கருத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுமா?

2. முன்னாள் ஐ.ஜி.பி பூஜித் ஜெயசுந்தரவுக்கு நன்கு தெரிந்தவராகவும், கிழக்கில் சஹாரானுக்கு பணம் மற்றும் ஆயுதங்களை வழங்கியவருமாக கருதப்படும் ராஜபக்ச ஆதரவு கும்பல் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணிபுரிந்த அதன் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்களா?

3. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு தெஹிவளையில் இறந்த தற்கொலை குண்டுதாரி ஜமீல் முன்னதாக கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிக்குமாறு முன்னாள் இராணுவப் புலனாய்வுத் தலைவர் சூல கொடிதுவக்கு வலியுறுத்தியுள்ளார். அவர் இராணுவப் புலனாய்வுத் துறையில் ஈடுபட்டதாகக் கூறியமையில் உள்ள பின்னணி என்ன?

4. மட்டக்களப்பு மற்றும் வவுணதீவு தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பு ஈடுபாட்டதாக காட்ட அவர்கள் பயன்படுத்திய உடைகள் யாருடைய அறிவுறுத்தலின் பேரில் வைக்கப்பட்டன?

5. சுரேஷ் சலேவுக்கும் நிலந்த ஜெயவர்தனாவுக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளின் பின்னணி என்ன?

6. ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நாசமாக்க சுரேஷ் சலேவின் கும்பல் இனவாத தலைவர்களாக கருதப்படும் சிலருக்கு(மதம் மற்றும் அரசியல்) லஞ்சம் வழங்கியதாக கூறப்படும் விடயம் மற்றும் தொலைபேசி அழைப்புக்களின் பின்னணி என்ன?

7. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவின் பேரில், அப்போதைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மீதான தீவிரவாதத் தாக்குதல்கள் மீண்டும் நிகழும் என்று கூறி பொதுமக்களிடையே அச்சத்தைத் தூண்டுவதற்காக கடற்படைக் குழுவை அனுப்பிய பின்னணி என்ன?

8. 2018 செப்டம்பர் மாதத்தில் நாமல் குமார ஊடக சந்திப்பொன்றை நடத்தி, DIG நாலக டி சில்வாவுடன் நடைபெற்றதாகக் கூறிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகளை வெளியிட்டார். அந்த ஒலிப்பதிவுகளில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேனாவை கொலை செய்யும் திட்டம் குறித்து உரையாடல் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார் இதன் பின்னணி என்ன?

 9. மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜெயவர்தனவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்க பூஜித் ஜெயசுந்தராவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? அவர்களை ஆதரித்த கண்ணுக்குத் தெரியாத கை யார்? அந்தப் பணத்தைப் பயன்படுத்திய ரகசியக் கணக்குகள் யாருடையது?

10. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு சில உள்நாட்டு ஊடகங்களுக்கு எவ்வாறு சஹாரான் மற்றும் குறித்த கும்பலின் இறுதி காணொளி காட்சிகள் கிடைத்தன?

11. கடந்த இரண்டு தசாப்தங்களாக கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறங்களில் பல்வேறு பெயர்களில் ராஜபக்ச ஆதரவுப் பிரிவினரால், அவருடன் பணியாற்றிய சுரேஷ் சலே உட்பட, கையகப்படுத்தப்பட்ட அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் குறித்த அறிக்கை கூறுவது என்ன?

12. சாரா ஜாஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரன் சம்பவம் குறித்து மீண்டும் ஒரு சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மேற்கூறிய குறிப்பிட்ட சம்பவங்கள் ஆழமாக விசாரிக்கப்பட்டால், இந்தக் கொடூரமான குற்றத்தில் உள்ள தொடர்பு சட்டத்தின் முன் அம்பலப்படுத்தப்படும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு...

ஈஸ்டர் தாக்குதலுடன் வெளிவந்த சோனிக்.. சோனிக்.. என்ற ஒரு பெயர்

ஈஸ்டர் தாக்குதலுடன் வெளிவந்த சோனிக்.. சோனிக்.. என்ற ஒரு பெயர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016