உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமைச்சரவையில் கலந்துரையாட விரைவில் சிறப்பு திகதி யொன்று அறிவிக்கப்படும் என ஊடக அமைச்சரும் இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பெப்ரவரி 1 ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து அது குறித்து விசாரிக்கவும் அறிக்கை சமர்ப்பிக்கவும், செப்ரெம்பர் 22, 2019 அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவால் இந்த ஆணையம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.