கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் கருத்தால் மைத்திரிக்கு ஏற்பட்ட வருத்தம்
srilanka
easter
maithripala
By Vasanth
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்த கருத்து தொடர்பில் தான் வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாவல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தனது கடமைகளை நிறைவேற்ற தவறியபின்னரும் வெட்கமின்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றார் எனவும் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்து தொடர்பிலேயே தான் வருத்தமடைவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்