பொதுபல சேனா தடைசெய்யப்படாது! அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு
srilanka
easter
gnanasara thero
By Vasanth
பொதுபல சேனாவை தடைசெய்யவேண்டும் என்ற பரிந்துரையை அமைச்சர்கள் குழு நிராகரித்துள்ளதாக அமைச்சரவை குழுவின் செயலாளர் ஹரிகுப்த ரோகணதீர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழுவே இத்தீர்மானித்தை எடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமின் அமைப்பு உட்பட பல அமைப்புகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளன.
இந்த அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்ற பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.
எனினும் பொதுபலசேனா குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு இல்லை என்பதால், அதனை தடை செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி