மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை
மட்டக்களப்பில் (Batticaloa) கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று (20.04.2025) காலையில் இடம்பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்திலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
மேலும் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பிரதான உயிர்த்த ஞாயிறு வழிபாட்டு திருப்பலி புனித மரியாள் போராலயத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம் பெற்றது.
ஈஸ்டர் ஆராதனை வழிபாடு
இதன் போது அதிகளவிலான இறை விசுவாசிகள் கலந்து கொண்டதுடன், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஈஸ்டர் ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது.
இந்நிலையில் மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு, நாடாளாவிய ரீதியில் கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, காவல்துறை அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
