பொருளாதார நெருக்கடி : மூன்று ஆண்டுகளில் முப்பதாயிரம் கோடி நகைகளை விற்ற மக்கள்
இலங்கையில் அதிகரித்துவரும் பொருட்களின் விலையேற்றம் அதனால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக மக்கள் சேமித்துவைத்த சொத்துக்களை விற்றுவருவது அதிகரித்தவண்ணம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி கடந்த மூன்றாண்டுகளில் முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் சொத்துக்களை மக்கள் விற்பனை அல்லது அடமானம் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகைகள் அனைத்தும் விற்பனை
இந்த தகவல் நிதி அமைச்சகம் மற்றும் மத்திய வங்கியின் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, மக்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் வைக்க அல்லது விற்க முற்படுகின்றனர். மேலும் சில வீடுகளில் இருந்த நகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாகனங்களும் விற்பனை
இதேவேளை கடந்த சில ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி காரணமாக வாகனங்கள் வாங்குவதும் சுமார் எண்பது சதவீதம் குறைந்துள்ளதாக வாகன சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமானத் தொழில் தொடர்பான வாகனங்கள், விவசாயம் தொடர்பான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |