இலங்கையை மீட்க சம்பிக்க ரணவக்க பிரயத்தனம்
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தலைமையேற்க தான் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், இதற்கு நாட்டை நேசிக்கும் நேர்மையான நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவி அவசியம் எனக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் தேர்தல் ஒன்றை நடத்துவது எந்த வகையிலும் பொருத்தமற்றது.
புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்காக தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளேன்.
நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரச தலைவர் மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்து, குடும்ப ஆட்சி இல்லாத பின்னணியை உருவாக்க வேண்டும்.
நாட்டை கட்டியெழுப்புவதற்காக நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.