சர்வதேச நாணய நிதிய உதவியால் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை
TNA
S Shritharan
IMF Sri Lanka
Economy of Sri Lanka
By Vanan
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு பெரும் சுமையைக் கொடுத்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - தர்மபுரத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலை
“இலங்கை அரசாங்கத்திடம் நிலையான பொருளாதார கொள்கையில்லை.
மக்கள் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் எரிபொருள் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்