கல்வி அமைச்சுக்கு முன்பாக மீண்டும் பதற்றம்!
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி, கல்வி அமைச்சுக்கு முன்பாக பெற்றோர் குழு ஒன்று தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தரம் 06 பெற்றோர் சங்கம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட பெற்றோர் குழுவினால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (19.01.2026) காலை இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது.
கோரிக்கை
இதேவேளை, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி பல பகுதிகளில் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொலன்னறுவை, காலி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, அரசாங்கத்தை உகந்த கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டுவர வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தீப்பந்தப் போராட்டம் நேற்று (18.01.2026) இரவு ருவன்வெல்ல கன்னத்தொட்ட பகுதியில் நடைபெற்றது.
சம்பவ இடத்திற்கு வந்த ஒரு குழுவினர் போராட்டக்காரர்களைத் தடுத்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |