மியன்மாரில் கைதான இலங்கை கடற்றொழிலாளர்களை உடன் விடுவிக்க நடவடிக்கை
மியன்மார் அரசினால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை வழக்குத் தொடராமல் விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்காக மியன்மார் உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களில் சிலர் நோய்வாய்ப்பட்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துமீறி மீன்பிடி
ஒவ்வொரு ஆண்டும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மியன்மார் அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மியன்மாரின் கடல் எல்லையை அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இலங்கை கடற்றொழிலாளர்கள் இரண்டு மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த குழுவினர் கல்பிட்டி மற்றும் மிகோமு பகுதிகளுக்கு ராயன்புட்டா மற்றும் லாரன்ஸ் என்ற கடற்றொழில் படகுகள் மூலம் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் கடந்த 2ஆம் திகதி மியன்மார் அரசினால் கைது செய்யப்பட்டதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |