முட்டை தாக்குதலின் பின்னணியில் பலம் வாய்ந்த அமைச்சர் மற்றும் பிரபல வர்த்தகர் (படம்)
கம்பஹாவில் இன்று (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட மாநாட்டிற்கு முட்டை தாக்குதல் நடத்த வந்த இருவர், அங்கிருந்தவர்களால் கைது செய்யப்பட்டு நிட்டம்புவ காவல்துயைினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முட்டை தாக்குதலின் அனைத்து விபரங்களையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலம் வாய்ந்த அமைச்சர் மற்றும் பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் பெயர்களை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் தங்களுக்கு ரூ.1000 சம்பளம் வழங்கியதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. சந்தேகநபர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், முட்டை தாக்குதலை நடத்துவதற்கான சதித்திட்டம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிட்டம்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
(தாக்குதலை மேற்கொண்டவர்கள்)

