சுற்றுலாப்பயணம் சென்ற தம்பதிக்கு இந்தியாவில் நேர்ந்த கொடூரம்: அதிரடியாக செயற்பட்ட காவல்துறையினர்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை கூட்டாக சேர்ந்து தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் எட்டு ஆண்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை(01) இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் சாலையோரமாக இருந்த சைக்கிள்களை அவதானித்த காவல்துறையினர், பாதிக்கப்பட்டிருந்த தம்பதியினரை கண்டு மீட்டுள்ளனர்.
அவர்கள் தாக்கப்பட்ட நிலையில் இருந்ததை அவதானித்த காவல்துறையினர் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இனம்தெரியாத நபர்கள்
அங்கு சிகிச்சை அழிக்கப்பட்டதன் பின் குறித்த பெண் புலனாய்வுத்துறையினரிடம் தன்னை தகாதமுறைக்கு உட்படுத்தியது மாத்திரமல்லாமல் தனது கணவரையும் அடித்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியினரென்றும் சுற்றுலாப்பயணிகளாக இந்தியாவிற்கு வந்த இவர்கள் மோட்டார் சைக்கிளில் தங்கள் பயணத்தை நடத்திவந்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவ தினத்தன்று, அவர்கள் ஜார்க்கண்டில் ஒரு கூடாரத்தை அமைத்து அங்கு ஓய்வெடுத்ததாகவும், இந்த வேளையிலேயே இனம்தெரியாத நபர்கள் தகாத செயலில் ஈடுபட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
இந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் சம்பவத்தை நிகழ்த்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டு மொத்தமாக எட்டு பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவமானது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவத்திற்கு எதிரான கண்டனங்களும் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |