மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளின் பெயர்களில் திருத்தம் வேண்டும்! ஆராயும் தேர்தல்கள் ஆணைக்குழு
srilanka
election
2020
commission
By Vasanth
மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இது குறித்த கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனம், மதத்தின் அடிப்படையில் இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கான கால அவகாசத்தினை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.