தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று (11.11.2024) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரை அமைதி காலம் நடைமுறையில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு
இந்த ஆண்டுக்கான தேர்தல் கண்காணிப்பில் பங்கேற்கும் ஆசிய நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11.11.2024) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஐரோப்பிய அமைப்பு உள்ளிட்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே நாட்டுக்கு வந்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த இறுதி பிரச்சார கூட்டங்கள் இன்று மாலை நடைபெறவுள்ளன.
இறுதி பிரச்சார கூட்டங்கள்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) இறுதிப் பிரமாண்ட பேரணி இன்று (11.11.2024) மாலை கம்பஹா மாநகர சபை மைதானத்திலும், பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்கிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) இறுதி மாபெரும் பேரணி அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் கொழும்பு அளுத்கடை சந்தியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) இறுதிப் பேரணியானது நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தலைமையில் தங்காலை கார்ல்டன் வீடமைப்புத் தொகுதியில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்