சுண்டிக்குளத்தில் அதிகரிக்கும் கடல் அரிப்பு! அழியும் பெறுமதிவாய்ந்த சொத்துக்கள்
Sri Lankan Tamils
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fisherman
By Erimalai
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளா் பிரிவிற்கு உட்பட்ட J/435 கிராம சேவையாளா் பிரிவான சுண்டிக்குளம் பகுதியில் கடல் அரிப்பின் தாக்கம் அதிகரித்துவருகின்றது.
குறித்த சுண்டிக்குளம் கிராமத்தை கடந்த வருடம் திட்வா புயல் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், குறித்த பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உட்புகுந்துள்ள கடல்
இதனால் கடற்றொழிலாளா்களின் பெறுமதிவாய்ந்த தொழில் உபகரணங்களும், இருப்பிடங்களும், கரையோர தென்னங்காணிகளும் அழிவடைந்துள்ளன.

திட்வா புயலின் சீற்றம் காரணமாக கடல் 150m தூரத்திற்கும் அதிகமாக உட்புகுந்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில், இவ்விடயத்தினை அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


9ம் ஆண்டு நினைவஞ்சலி