ஜப்பான் பறந்தார் அசோக ரன்வல :உறுதிப்படுத்திய கம்மன்பில
Japan
Udaya Gammanpila
Ashoka sapumal rangwalla
By Sumithiran
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கடந்த 19 ஆம் திகதி ஜப்பான் நோக்கி பயணமானதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மம்பில கூறியுள்ளார்.
கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,
பட்டச்சான்றிதழை எடுத்து வர பயணம்
தனது கலாநிதி பட்டச் சான்றிதழை எடுத்து வருவதற்காகவே ஜப்பான் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாம் அறிந்து கொண்ட வகையில் அவர் ஜப்பான் செல்வதற்கான வேறு காரணம் இல்லை என நினைகிறேன்.

கடந்த 19 ஆம் திகதி கெத்தே பசுபிக் விமான சேவையின் cx610 விமானத்தில் சென்றுள்ளார்.
அசோக ரன்வல புறப்படும் வாயிலின் 12 ஆவது ஓய்வறையில் அமர்ந்திருக்கும் படம் ஒன்றையும் ஊடகவியலாளர்களுக்கு காண்பித்து அவர் உறுதிப்படுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி