மாகாண சபைத் தேர்தல்களை நடத்த தயார்! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முன்னிலையாகியிருந்த போதே இந்த நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்களிப்புடன் இக்கூட்டம் நேற்று (22) நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட ரீதியான தடைகள்
இதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் காணப்படும் சட்ட ரீதியான தடைகளை விவரிக்கும் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதும், அது தொடர்பான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை வழங்குவதுமே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும்.
இக்குழு அண்மையில் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |