முதலமைச்சர் விஜய் புதிய ஆலோசகர்கள் நியமனம் - வெடித்த புதிய சர்ச்சை
முதலமைச்சர் விஜயின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு பொறுப்பேற்று, அமைச்சரவை விரிவாக்கங்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் முதலமைச்சரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியமனம் சர்ச்சை
தவெகவின் வியூக வகுப்பாளராக உள்ள ஜான் ஆரோக்கியசாமியை முதலமைச்சரின் அரசியல் பிரிவு ஆலோசராக நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல விஜயின் நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டியை பொது விவகாரங்களுக்கான ஆலோசகர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகயுள்ளது.
ஏற்கனவே விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட் அரசு ஆலோசராக நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனால் அந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது.
இந்நிலையில், விஜய்க்கு நெருக்கமான இருவருக்கு அரசு பொறுப்பு வழங்கப்படுவது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
ஒருபுறம் நிர்வாக ரீதியான பொது நிகழ்வுகளுக்கு விஷ்ணு ரெட்டியையும், மறுபுறம் அரசியல் ரீதியாகத் தன்னை வழிநடத்த ஜான் ஆரோக்கியசாமியையும் களம் இறக்கியிருப்பது தவெக அரசை மேலும் பலப்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |