டக்ளஸிடம் இருந்து அநுரவுக்கு பறந்த அவசர கோரிக்கை...!

Anura Kumara Dissanayaka Douglas Devananda Sri Lanka Politician
By Theepan May 21, 2026 11:15 PM GMT
Report

படகுகள் பழுதடைந்ததால் போக்குவரத்து சேவை பாதிப்படைந்து பல்வேறு இடையூறுகளை நாளாந்தம் எதிர்கொண்டுவரும் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவையைச் சீராகக் கொண்டுசெல்ல ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைக் காலமாக நெடுந்தீவு மக்களுக்கான கடற்போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுவரும் பல்வேறு இடையூறுகள் மற்றும் நெருக்கடிகள், அதற்கான தீர்வுகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நெடுந்தீவு மக்களிடம் இருந்து தமக்கான கடல் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் நாளாந்தம் பல தொலைபேசி அழைப்புகள் என்னிடம் வந்துகொண்டிருக்கின்றன.

ஈரானின் அணுசக்திப் பேராபத்தை முடக்க கைகோர்க்கும் சீனா - ரஷ்யா...!

ஈரானின் அணுசக்திப் பேராபத்தை முடக்க கைகோர்க்கும் சீனா - ரஷ்யா...!

திருத்த வேலை

இந்தப் பிரச்சினை இன்று மட்டுமல்ல அன்று எமது ஆட்சிக் காலத்திலும் இருந்ததுதான்.

ஆனாலும் அன்று இவ்வாறான பிரச்சினைகள் வந்தபோது அதற்கான தீர்வுகளை நாம் உடனடியாக ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்திருந்தோம்.

டக்ளஸிடம் இருந்து அநுரவுக்கு பறந்த அவசர கோரிக்கை...! | Douglas Urges Anura To Fix Delft Boat Issue

குறிப்பாகத் தற்போது நெடுந்தீவின் போக்குவரத்து சேவையைப் பிரதான படகுகளான குமுதினி, வடதாரகை, நெடுந்தாரகை ஆகிய மூன்று படகுகள் மேற்கொண்டுவருகின்றன.

ஆனால் அவை மூன்றும் தற்போது பழுதடைந்து திருத்த வேலைகளை எதிர்கொண்டுவருகின்றன.

மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றம்: வான்பரப்பை அதிரடியாக மூடிய குவைத்!

மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றம்: வான்பரப்பை அதிரடியாக மூடிய குவைத்!

போக்குவரத்து சேவை

இதேநேரம் நெடுந்தீவின் போக்குவரத்து சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபையே முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக எமது ஆட்சிக் காலத்தில் பெரும் பொருளாக இருந்த இவ்விடயம், துறைசார் தரப்பினருடன் ஆராயப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையே தமக்கான கடமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தியதன் அடிப்படையில் அவர்கள் அதை ஏற்று இலவசமான போக்குவரத்து சேவையை இன்றுவரை முன்னெடுத்து வந்திருந்தனர்.

டக்ளஸிடம் இருந்து அநுரவுக்கு பறந்த அவசர கோரிக்கை...! | Douglas Urges Anura To Fix Delft Boat Issue

ஆனாலும் இன்று குறித்த மூன்று படகுகளும் பழுதடைந்து செயற்பாடற்று இருப்பதால் மாற்று வழியின்றி மக்கள் பல்வேறு அல்லல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் அனுர ஜனாதிபதி இதில் தலையிட்டு கடற்போக்குவரத்து சேவைக்கு குறிப்பாக இந்தக் கடற்பரப்பில் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள படகொன்றை வாடகைக்கு அமர்த்தி மக்களுக்கான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாக இருக்கின்றது.

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி...! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப்

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி...! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப்

கூட்டுறவுச் சங்கங்கள்

அத்துடன் கடந்த காலத்தில் இவ்வாறான ஏற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதையும் ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் நான் நினைவூட்டுகின்றேன்.

அதேபோன்று கூட்டுறவுச் சங்கமும் தேவா ரதம் என்ற ஒரு படகு வைத்திருந்தது, அதுவும் தற்போது பழுதடைந்த நிலையிலேயே இருக்கின்றது.

டக்ளஸிடம் இருந்து அநுரவுக்கு பறந்த அவசர கோரிக்கை...! | Douglas Urges Anura To Fix Delft Boat Issue

எனவே, கொழும்பில் இருக்கும் தேசிய கூட்டுறவு சபையிடம் பரிந்துரை செய்து குறித்த படகைத் திருத்துவதற்கான ஒரு கடனுதவியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.

அத்துடன் குறித்த கடனுதவி நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கங்களுக்கு மட்டுமல்லாது தீவக பகுதியில் இருக்கும் அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தேசிய கூட்டுறவு சபையின் ஊடாக ஓர் இலகு கடனுதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

நிகழ்கால மற்றும் எதிர்காலங்களில் மக்கள் உணவுத் தட்டுப்பாடு அல்லது விலையேற்றத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதால் தேசிய கூட்டுறவு சபையுடன் கதைத்துத் தீவக கூட்டுறவுச் சங்கங்களுக்கு இலகு கடன் கிடைக்கச் செய்வதனூடாக மக்களுக்குப் பொருட்கள் மற்றும் சேவைகள் இலகுவாகக் கிடைக்கச் செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேல் நிபந்தனை தவிடுபொடி: ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாடு செல்லாது...! மொஜ்தபா அதிரடி

அமெரிக்கா - இஸ்ரேல் நிபந்தனை தவிடுபொடி: ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாடு செல்லாது...! மொஜ்தபா அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026