ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சிடும் செலவினம் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும்: அரச அச்சகமா அதிபர் தகவல்
கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தலுக்கான அச்சிடும் செலவினம் மூன்று மடங்கு அதிகரிக்கக்கூடும் அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சுப் பணிகளுக்காக சுமார் 800 மில்லியன் ரூபாய் செலவிடப்படுமென எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டின் நீளம் 27 அங்குலமாக இருந்தது.
வேட்பாளர்களின் எண்ணிக்கை
இந்த முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிக்கும் எனவே அச்சிடும் செலவுகளும் அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப்போட்டி கடுமையாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் வேட்பாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் கூடிக்கொண்டே செல்கின்றது.
அந்த வகையில் நேற்று முன்தினம் (02) வரை ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சர்ச்சைக்குரிய இளம் தாயின் மரணம்: வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |