NPP-க்கு தாயக வாக்குகளை தாரைவார்க்க கூட்டணி போடும் தமிழ் தலைமைகள்...!
முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்திக்கு இலங்கை தமிழரசுக் கட்சியும் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் தாரை வார்த்து கொடுத்ததை போன்ற ஒற்றுமை தமிழ் மக்களுக்கு தேவை இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஒரு வருடமாக உள்ளுராட்சி மன்ற தேர்தல்களையொட்டி தமிழ் கட்சிகளுக்கிடையில் கூட்டுக்கள் மற்றும் பிரிதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், இவ்வாறு தேர்தல்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் கூட்டுக்கள் வருவதும் ஒன்றுதான் அவை இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.
இதன் வரிசையில்தான் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்திக்கு இலங்கை தமிழரசுக் கட்சியும் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் தாரை வார்த்தது.
எனவே, இவ்வாறான ஒற்றுமை எங்களுக்கு தேவை இல்லை அத்தோடு, இது ஒற்றுமையும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழர் தரப்பு அரசியல் களம், தேசிய மக்கள் சக்தி தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கும் அரசியல் மற்றும் நடப்பு அரசியல் தொடர்பில் அவர் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது சக்ரவியூகம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |