நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் - டக்ளஸ் தெரிவிப்பு
நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவது பற்றி ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்