அமைச்சர்களின் உறுதிமொழிகள் காற்றில் பறப்பு-நிறுத்தப்படும் நீர், மின் விநியோகம்
பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய கொவிட் தொற்று காரணமாக மின்சாரம் மற்றும் நீர் விநியோக கட்டணங்களை செலுத்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ள போதிலும் இவ்வாறு அந்த விநியோகம் நிறுத்தப்படுவதாக நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே(Gamini Lokuge) அண்மையில் நிலுவைத் தொகையை செலுத்த ஒரு வருடம் வழங்கப்படும் என்று கூறினார். நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara)நீர் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் நீர் வழங்கல் துண்டிக்கப்படாது என்றும் தெரிவித்திருந்தார்.
எனினும்,இலங்கை மின்சார சபை, லங்கா தனியார் மின்சார நிறுவனம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிராந்திய அலுவலகங்கள் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை துண்டிக்கின்றன என்று நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.