மின்சார மோசடி : அரசுக்கு கிடைத்த மில்லியன் வருமானம்
கடந்த ஆண்டு (2025) மோசடியாக மின்சாரத்தைப் பயன்படுத்தியவர்களிடமிருந்து ரூபாய் 90 மில்லியனுக்கு மேல் மீட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு, நாடு முழுவதும் நடத்திய சோதனைகளின் போது ரூ. 92,770,061.21 தொகையை மீட்டுள்ளது மற்றும் சட்ட அமலாக்கக் கட்டணமாக இரண்டு மில்லியன் ரூபாய்க்கு மேல் (ரூ. 2,527,500) செலவிட்டதாக சபை தெரிவித்துள்ளது.
இரண்டு வகையான மோசடி
இந்த சோதனைகளின் போது மின் மீட்டர்களை மாற்றுவதன் மூலம் மின்சாரம் பயன்படுத்தியதாக 1,259 வழக்குகளும், கொக்கிகளைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத மின்சாரம் பயன்படுத்தியதாக 72 வழக்குகளும் கண்டறியப்பட்டதாகவும், அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் மின்சார சபையின் சிறப்பு புலனாய்வு பிரிவின் மேலாளர் இந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

மின்சார சபையின்புலனாய்வுப் பிரிவுக்கு வரும் அனைத்து புகார்களும் சோதனை செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறிய இந்திக பெர்னாண்டோ, மோசடி மின்சார நுகர்வு தொடர்பான தகவல்களை 0112422259 அல்லது 1987 என்ற தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |