ஹபரணை காட்டுப்பகுதியில் மயிரிழையில் உயிர் பிழைத்த வெளிநாட்டு தம்பதி
ஹபரணை காட்டுக்கு நடுவில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் யானையை புகைப்படம் எடுக்கச் சென்ற உக்ரைன் தம்பதியரை நோக்கி வந்த யானை அவர்கள் பயணித்த வாகனத்தை கடுமையாக தாக்கி பலத்த சேதப்படுத்தியுள்ளதாக மின்னேரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
தம்பதியினர் பொலனறுவையில் இருந்து ஹபரணை நோக்கி சென்று கொண்டிருந்த போது, காட்டு யானையை படம் பிடிப்பதற்காக தேவாலயத்திற்கு அருகில் வாகனத்தை நிறுத்தினர். பின்னர் தம்பதியினர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த காட்டு யானை அவர்கள் வந்த வாகனத்தை தாக்கியது.
குறித்த வீதியில் பயணித்த டிப்பர் சாரதி ஒருவர், டிப்பர் வாகனத்தை பயன்படுத்தி யானையை காட்டுக்குள் துரத்த நடவடிக்கை எடுத்துள்ளார். காரில் வந்ததாகக் கூறப்படும் தம்பதியினர் எவ்வித காயங்களும் இன்றி அவர்கள் தங்கியிருந்த ஹபரணை பகுதியில் உள்ள விடுதிக்கு பாதுகாப்பாகச் சென்றுள்ளனர்.
தம்பதியினர் வந்ததாகக் கூறப்படும் வாகனம் வாடகை வாகனம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த வாகனத்தை காவல்நிலையத்திற்கு கொண்டு வர மின்னேரிய காவல்துறையனர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மின்னேரிய காவல் பிரிவின் பிரதான காவல்துறை பரிசோதகர் ஆர்.எம்.சி ரத்நாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.