யானைக்கால் நோயினால் அச்சுறுத்தலுக்குள்ளாகும் குழந்தைகள் : சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்
Puttalam
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Beulah
தற்போது 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கிராமப்புற யானைக்கால் நோயின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விடயம் குறித்து சுகாதார பூச்சியியல் அதிகாரி புத்திக சமில மேலும் அறியத்தருகையில்,
கிராமப்புற யானைக்கால்
"யானைக்கால் நோயில் இரண்டு பகுதிகள் உள்ளன. கிராமப்புற யானைக்கால், நகர்ப்புற யானைக்கால் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறோம்.
கிராமப்புற யானைக்கால் நிலை முன்பு இருந்தே உள்ளது. ஜப்பான்ஜபரா, சல்வேனியா போன்ற தாவரங்கள் பெருகியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
அதிலிருந்து உருவாகும் பான்சோனியா என்ற நுளம்பு வகைகளே இந்நோயினை தோற்றுவிக்கின்றது.
இந்த நுளம்புத்தொகையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதோடு, புத்தளம் மாவட்டத்தில் தற்சமயம் கிராமப்புற யானைக்கால் நோயே அதிகளவில் பதிவாகியுள்ளது" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி