என்ன நடக்கிறது ஆனையிறவு உப்பளத்தில் : உண்மையை மறுக்கும் அரசு
நாட்டில் தற்போது உப்பு பிரச்சனை என்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
அதிலும் கடந்த சில நாட்களாக ஆனையிறவு உப்பு என்ற பெயர் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் அதிகம் பேசப்பட்டது.
வடபகுதியில் அமைந்துள்ள ஆனையிறவு உப்பளமானது தேசிய மக்கள் சக்தி (Npp) அரசாங்கத்தினால் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடந்த 11 நாட்களாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டம் தொடர்பாக அண்மையில் நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்வதற்கு லங்காசிறியின் செய்தி பிரிவு நேரடி கள ஆய்வொன்றை மேற்கொண்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தங்களது ஆதங்கங்களை எம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this

