அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ட்ரம்புடன் கைகோர்த்தார் எலோன் மஸ்க்
நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு(donald trump) அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்elon musk) ஆதரவளிக்கவுள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூக ஊடக வலையமைப்பின் உரிமையாளரான எலோன் மஸ்க், டிரம்புடன் தேர்தல் மேடையில் இன்று (6) பென்சில்வேனியாவின் பட்லரில் நடைபெற்ற பொது பேரணியின் போது டிரம்பிற்கு தனது ஆதரவை அறிவித்தார்.
இதுவே கடைசி தேர்தலாக இருக்கும்
பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியில் உரையாற்றிய எலோன் மஸ்க்,"உங்களுக்குத் தெரிந்த அனைவரையும், உங்களுக்குத் தெரியாத அனைவரையும் வாக்களிக்க பதிவு செய்ய இழுக்கவும். "அவர்கள் இல்லை என்றால், இதுவே கடைசி தேர்தலாக இருக்கும். இது என் கணிப்பு." என தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த இடத்தில் மீண்டும் பிரசாரம்
கடந்த ஜூன் 13ம் திகதி இந்த இடத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் மீது துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தனது பிரசார கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டது. மேடையில் குடியரசுக் கட்சியினர் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், அந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |