புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க மிதக்கும் படகு - பிரித்தானியாவின் புதிய திட்டம் (படங்கள்)
பிரித்தானியாவில் "மிதக்கும் சிறை" என விமர்சகர்களால் அழைக்கப்படும் மிதவைப்படகில் ஏற்றப்பட்ட புலம்பெயர்ந்தோரில் சிலர், அந்தப் படகு வாழ்க்கை பற்றிய அனுபவங்கள் வெளியிட்டுள்ளனர்.
புலம்பெயர்ந்தோரை மிதக்கும் படகில் அடைக்கும் பிரித்தானியாவின் திட்டம் குறித்து புலம்பெயர்தல் ஆதரவு சட்டத்தரணிகளும் எதிர்க்கட்சியினரும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், மிதவைப்படகில் ஏற்றப்பட்ட ஈரான் நாட்டவரான ஆமிர் (Amir, 32) என்னும் புலம்பெயர்ந்தோர், அங்கு காலை உணவாக கொடுக்கப்பட்ட முட்டைகள், சீஸ் மற்றும் ரொட்டியை சுவைத்தபின், பரவாயில்லை, இது எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் கருத்து

அல்ஜீரியா நாட்டவரான மற்றொரு புலம்பெயர்ந்தோரும், எல்லாம் நன்றாக இருக்கிறது, நார்மலாகத்தான் இருக்கிறது, உணவு நன்றாக இருக்கிறது, படுக்கை நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
222 அறைகள் கொண்ட இந்த படகானது தற்போது டோர்செட்டில் உள்ள போர்ட்லேண்டில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த படகில் சிற்றூண்டிசாலைகள், உடற்பயிற்சி கூட்டங்கள் மற்றும் திரையரங்கம் என்பன உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.