இலங்கையை வந்தடைந்த புதிய விமானம்
துபாய் எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
குறித்த விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இரட்டை எஞ்சின்களை கொண்ட இந்த ஏர் பஸ் ஏ350 விமானம், மேம்பட்ட தொழில்நுட்பங்களோடும் திறமைகளோடும் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
விமான சேவை
இந்த விமானத்தில் பயணிகளுக்காக 312 ஆசனங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் 32 வணிக வகுப்பு ஆசனங்களும, 21 உயரிய வணிக வகுப்பு ஆசனங்களும், 259 பொருளாதார வகுப்பு ஆசனங்களும் அடங்குகின்றன.
நீண்ட தூர பயணத்திற்கேற்றவாறு பெரிய குளியலறைகள மற்றும் சிறந்த ஆசனங்கள் ஆகியன உள்ளன.
எமிரேட்ஸ் விமான சேவையானது வாரத்திற்கு நான்கு முறை துபாயிலிருந்து இலங்கைக்கு சேவையை வழங்குகிறது.
சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை, மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10,620 ஆகும்.
அதன்படி, ஜனவரி மாதம் முதல் மே மாதம் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 930,794 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
