வெளிநாடொன்றில் இலங்கையருக்கு கிடைக்கவுள்ள வேலைவாய்ப்பு
லிபியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள இலங்கையருக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
இலங்கைக்கான லிபிய தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவர் மற்றும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவிற்கு (Major General Mahinda Hathurusinghe) இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
லிபிய பொருளாதாரம் தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாகவும், நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக, இலங்கை பயிற்சி தொழிலாளர்களுக்கு அந்நாட்டில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக லிபிய அரசாங்கத்துடன் இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என இலங்கைக்கான லிபிய தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்களை விரைவில் நடத்தி இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.