விசேட சுற்றிவளைப்பு - சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது (படங்கள்)
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சுற்றிவளைப்பானது கடந்த 25 ஆம் திகதி மற்றும் 26 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கை அண்மித்த கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய திருகோணமலை, லங்காப்பட்டினம், குச்சவெளி மற்றும் யாழ், சாலை அண்மித்த கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை

அத்துடன் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள், மின் உபகரணங்கள் மற்றும் 06 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 38 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் திருகோணமலை, ஈச்சலம்பற்று, குச்சவெளி மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய கைது செய்யப்பட்ட நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை, காட்பே, குச்சவெளி மற்றும் யாழ்ப்பாணம் மீன்பிடி ஆய்வாளர்கள் காரியாலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.


செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 14 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்