ஈ.பி.டி.பி - தமிழரசு பேச்சுவார்த்தை: தெரியாது என கைவிரித்த சி.சிறீதரன்

Ilankai Tamil Arasu Kachchi Douglas Devananda
By Thulsi Jun 06, 2025 03:20 AM GMT
Report

தமிழ்த் தேசியத்திற்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் (Douglas Devananda) பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் (Sridharan Sivagnanam) தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாகவும் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் நேற்று வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசியுள்ளார்.

வடக்கு, கிழக்கு ஆட்சியமைப்பு: ஈபிடிபியிடம் மண்டியிட்டது தமிழரசு

வடக்கு, கிழக்கு ஆட்சியமைப்பு: ஈபிடிபியிடம் மண்டியிட்டது தமிழரசு

உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறீதரன் எம்.பி., “உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி கட்சியின் உயர்மட்டக் குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

ஈ.பி.டி.பி - தமிழரசு பேச்சுவார்த்தை: தெரியாது என கைவிரித்த சி.சிறீதரன் | Epdp And Ilankai Tamil Arasu Kachchi Meeting

ஆகவே இந்தச் சந்திப்பு தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்கே இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்தது.

அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில், அது பற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டியது அவசியம் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தலைவரின் ஆயுதங்களை நாட்டுக்குள் இறக்கிய அநுர..! அர்ச்சுனாவால் வெடித்தது சர்ச்சை

தலைவரின் ஆயுதங்களை நாட்டுக்குள் இறக்கிய அநுர..! அர்ச்சுனாவால் வெடித்தது சர்ச்சை

ஆட்சியமைக்க அலையும் தமிழரசுக்கட்சி :அநுர தரப்பிடமும் ஆதரவு கோரியமை அம்பலம்

ஆட்சியமைக்க அலையும் தமிழரசுக்கட்சி :அநுர தரப்பிடமும் ஆதரவு கோரியமை அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016