எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை அதிபர் தேர்தல் காலத்தில் அமெரிக்காவின் (US) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற தாக்குதல் நடத்தப்படக் கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்
இதற்கமைய சஜித்தின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
மேலும், சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அரசாங்கம் சஜித்தின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |