அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல் நிலைமைகளினால் தேசிய மட்டத்தில் எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ள போதிலும், எதிர்க்கட்சிகளே அதனை அறியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் தேடுதல் நடவடிக்கை
இந்த நிலையில், அத்தியாவசிய உணவு பொருட்கள் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கோதுமை மா உட்பட இனிப்பு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என்று உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபை, தொடர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |