மல்லாவியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு
முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தில், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் இடம்பெற்றுள்ளது.
"கல்லறைகள் பேசும் கனவுகள் சுமந்த கார்த்திகை மாதம்" எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில், மல்லாவி சந்தைவீதிச் சந்தியிலிருந்து மாவீரர்களின் திருவுருவப்படம் தாங்கியவாறு, மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மங்கள வாத்திய இசையுடன் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மூன்று மாவீரர்களின் பெற்றோர்களால் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன், பொதுத் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
பின்னர், நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகள், பெற்றோர் மற்றும் உரித்துடையோரால் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |