தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதிக்கு கிடைக்கவுள்ள கௌரவம்
event
Mullaitivu
honor
Ganesh Indukadevi
By Vanan
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று ஒட்டுசுட்டான் - புதியநகரில் இடம்பெறவுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடத்தும் இந்த நிகழ்வுக்கு, ஐபிசி தமிழ் ஊடக அனுசரணை வழங்குகிறது.
இக்கௌரவிப்பு நிகழ்வு நாளைமறுதினம் ( ஜனவரி - 30) காலை 10 மணிக்கு புதிய சூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க உள்ளதுடன், அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு விழா ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

