நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நீதிமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் முன்னிலையாகாத காரணத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபை
2006ஆம் ஆண்டு இலங்கை முதலீட்டுச் சபையின் ஏற்பாட்டில் லண்டனில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்புக் கண்காட்சியின்போது, உணவக கட்டணம் மற்றும் கண்காட்சி செலவுகளுக்காக 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை, திறைசேரியின் விதிமுறைகளுக்கு முரணாகச் செலுத்துவதற்கு இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவரைத் தூண்டியதன் மூலம், கையூட்டல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஊழல் குற்றத்தைப் புரிந்ததாக ரோஹித போகொல்லாகமவுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் 2020ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவல் : கட்டுநாயக்காவில் உள்ள வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |