மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா (Mervyn Silva) உள்ளிட்ட மூவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மூவரையும் மே மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிடியாணை பிறப்பித்து உத்தரவு
இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மற்றும் மில்ராய் பெரேரா ஆகியோருக்கும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, மஹர நீதவான், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு (CID) அடுத்த விசாரணையின் போது இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கடந்த மார்ச் மாதம் 05 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
