மனுஷ நாணயக்கார சி.ஐ.டியில் முன்னிலை!
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணமோசடி சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (20) காலை குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகியுள்ளார்.
”இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி" அமைப்பின் தலைவரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக சொத்து குவிப்பு
அத்துடன் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக சொத்து அல்லது சொத்துக்களை ஈட்டினாரா என்பது குறித்து விசாரணை நடத்தக் கோரினார்.
அதற்கமைய 2011 ஆம் ஆண்டு 40 ஆம் எண் சட்டத்தால் திருத்தப்பட்ட 2006 ஆம் ஆண்டு 5 ஆம் எண் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், முன்னாள் அமைச்சர் தனது சொத்துக்களை எவ்வாறு பெற்றார் என்பதை விசாரிக்க விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வாக்குமூலம் அளிப்பதற்காக குறித்த பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
