முன்னாள் எம்பியும் ஊடகவியலாளருமான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்.
உடல்நலக்குறைவால் தமது 61 ஆவது வயதில் இன்று (21-06-2026) அவர் உயிரிழந்துள்ளார்.
சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, 1965 செப்டம்பர் 16 ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்து ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு
இதையடுத்துத் தொடர்ச்சியாக ஊடகங்களில் பணிபுரிந்த இவர், 2004 ஏப்ரல் 04 இல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மூலமாக விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களில் இவரும் ஒருவராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலில் 44,457 விருப்பு வாக்குகள் பெற்றுச் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, நாடாளுமன்றத்திற்குத் தெரிவான நிலையில் வடகிழக்கிலிருந்து தெரிவான 22 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.

இந்தநிலையில் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுமார் இரண்டு வாரங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |