முன்னாள் எம்.பி திஸ்ஸகுட்டி ஆராச்சியிடம் FCID ஐந்து மணி நேர விசாரணை!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் அளித்து விட்டு சற்றுமுன்னர் வௌயேறியுள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை (16) திஸ்ஸகுட்டி ஆராச்சி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
5 மணி நேர விசாரணை
இதற்கமைய அந்த பிரிவில் சுமார் 5 மணி நேரமாக வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சர்ச்சைக்குரிய மிக் போர் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் நேற்று (15) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |