நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தோல் சம்பந்தப்பட்ட பங்கஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் இந்திரா கஹவிட்ட தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு ஏற்படும் நோய்களுக்கு தாமே மருந்துகள் எதனையும் எடுத்துக் கொள்ளாது உடனடியாக பொருத்தமான மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியம் என மருத்துவ நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.
நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்
இந்நிலையில், அதிக சூரிய ஒளி படும் இடங்களில் இருப்பதே குறித்த நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்றும் அவ்வாறான இடங்களில் தரித்திருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு மருத்துவ நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறான சரும நோய் சிறு பிள்ளைகளின் முகத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதோடு உடலில் குறிப்பாக கைகளின் இடுக்குப் பகுதியில் வெள்ளை நிறத்தில் அதற்கான சில அடையாளங்கள் காணப்படலாம் எனவும் விசேட மருத்துவ நிபுணர் இந்திரா கஹவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |